2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தேசிய மட்டத்துக்குத் தெரிவு

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பெரியநீலாவணை, புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் இரு மாணவர்கள், மாகாண மட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று, தேசிய மட்டத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனரென, அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியின் கையெழுத்துப் பிரதி (Copy writing) போட்டி, மட்டக்களப்பு சிசிலியா கல்லூரியில், கடந்த வாரம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில், புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய மாணவர்களான  யூ.எப்.அனா (தரம் - 05), ஏ.எஸ்.எப்.சம்றா (தரம் - 11) ஆகியயோர் முதலாம் இடங்களைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மட்டப் போட்டிகள், கொழும்பில் இம்மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X