Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான
கல்முனை பிரதேச செயலக எல்லைப் பிரச்சினை தேர்தல் கால உண்டியலாக பாவிக்கப்பட்டு வருவதாக கல்முனை மறுமலர்ச்சி மன்றத் தலைவர் நஸீர் ஹாஜியார் தெரிவித்ததார்.
பொத்துவில் - பொலிகண்டி பேரணி மற்றும் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பிலான விசேட செய்தியாளர் சந்திப்பு, கல்முனையில் நேற்றிரவு (15) நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், “தேசிய ரீதியாக இன்று பேசுபொருளாக இருக்கின்ற விடயம் எல்லைநிர்ணம். அதாவது, பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் பற்றியதாகும்.
“அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் போன்ற பிரதேசங்கள் 100 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளாகும். இவற்றை எந்த அடிப்படையில் கிராம சேவகர் பிரிவுகளைப் பிரித்தாலும் எந்தப் பாதிப்பும் இன்றி, அதிகரித்த அபிவிருத்தி, நிதி வாய்ப்புக்கள் உருவாகும்.
“ஆனால், கடந்த 30 வருடங்களுக்கு மேலான கல்முனையில் புரையோடிப்போயுள்ள விடயம் தான் கல்முனை பிரதேச செயலகத்தில் உள்ள இன ரீதியான சீர்கெட்ட நிர்வாக நடவடிக்கையாகும். இங்கு தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இதை தீர்வு காணுகின்ற பொறுப்பு சகல சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் சிவில் அமைப்பினர்களுக்கும் உண்டு. இங்கு கல்முனையில் என்ன நடக்கின்றது என்பது தான் தற்போதைய விடயம்.
“இலங்கையின் அரசமைப்பானது இன ரீதியாக எல்லைப் பிரிப்புகள் இடம்பெற முடியாது எனக் கூறுகின்றது. ஆனால், இங்கு இன ரீதியான விடயங்கள் இடம்பெறுகின்றன. இவ்விடயங்களை வெளிக்கொணருவது எமது மக்கள் பிரதிநிதிகளின் வேலையாகும்.
“ஆனால், அவ்வாறின்றி தேர்தல் கால உண்டியலாக பிரதேச செயலகம் பாவிக்கப்பட்டு வருகின்து. அரசியல்வாதிகளுக்கு இப்பிரதேச செயலகம் நல்லதொரு மூலதனம். இந்த விடயம் தொடர்பில் சகல ஆவணங்களையும் கல்முனை மறுமலர்ச்சி மன்றமானது, பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளது.
“இது இவ்வாறிருக்க, தற்போது எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. எனவே, பொருத்தமான முறையில் அந்த எல்லை நிர்ணயமானது பிரதேச செயலகத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கெட்டுக்கொள்கின்றேன்” என்றார்.
24 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
37 minute ago