2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 15 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021 பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் பிரகாரம், அக்கரைப்பற்று பலாஹ் மற்றும் நகர் வட்டாரங்களில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகியின் தலைமையில், மாநகர சபையின் ஹல்லாஜ் கேட்போர் கூடத்தில் நேற்று (14) நடைபெற்றது.

இதன் போது அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான கிழக்கின் கேடயம் பிரதான செயற்பாட்டாளர் எஸ்.எம்.சபீஸ், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.நுஹ்மான், அக்கரைப்பற்று நகர்ப்பள்ளி வட்டாரக் குழுத் தலைவர் எம்.ஐ.எம். ஜுனைதீன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள்  உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .