2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்குவதற்கு, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளாரென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று (23) தெரிவித்தார்.

ஏற்கெனவே, கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு, நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தும், நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், தொண்டர் ஆசிரியர்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, அமைச்சரவை அங்கிகாரம் பெற்ற 440 பேருக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02, 03, 04ஆம் திகதிகளில், தொண்டர் ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக நேர்முகப்பரீட்சை நடத்தப்படவுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

இவர்களுக்கான, நிரந்தர நியமனம் மிக விரைவில் வழங்கப்படுமெனவும், கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி உறுதியளித்துள்ளாரெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

நிரந்தர நியமனம் கோரி, தொண்டர் ஆசிரியர்கள், பல போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .