2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நடமாடும் சேவையில், தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதிய, நம்பிக்கை நிதிய விடயங்களில் காணப்படும் பல குறைபாடுகள், பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டையில் காணப்படும் குறைபாடுகளுக்கான தீர்வுகள் காணப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் கடமைபுரியும் அம்பாறைப் பிரதேச வீதிப் பராமரிப்புத் தொழிலாளர்களுக்கான நடமாடும் சேவை, அம்பாறை வேலைப்பிரிவு காரியாலயத்தில், மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஐ.எல். அமீனுல் பாரி தலைமையில் இன்று (21) நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  மேலதிக மாகாணப் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர் என்.ரி.எம். சிராஜுடீன், நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.ஐ. நஹ்முடீன், மனித வள உதவியாளர் அசோகா மல்காந்தி, ஊழியர் நம்பிக்கை நிதிய அதிகாரிகள், தொழில் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X