2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தொழில்நுட்பவியல் பீடத்துக்கு புதிய பீடாதிபதி

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, சலீம் றமீஸ்

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக, உயிரியல் தொழில்நுட்பவியல் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியாகப் பதவி வகித்த கலாநிதி எம்.ஜீ. முகம்மட் தாரீகின் பதவிக் காலம், இம்மாதம் 28ஆம் திகதி முடிவடைந்ததையடுத்து, போட்டிகள் எதுவுமின்றி அப்துல் மஜீட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சப்ரகமுவப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், 2016ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X