Suganthini Ratnam / 2017 ஜனவரி 31 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாணப் பாடசாலைகள் மற்றும் அரசாங்க வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக தொண்டர்களாகச் சேவையாற்றுகின்றவர்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண ஒன்றிணைந்த தொண்டர் சேவையாளர்கள் அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம்.நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி அமைப்பின் மாதாந்தக் கூட்டம், ஒஸ்றா கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (30) இரவு நடைபெற்றது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகச்; சேவையாற்றி வரும் இவர்களின் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் கூடிய கவனம்; செலுத்த வேண்டும்;.
கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் 219 பேர் தொண்டர்களாகச் சேவையாற்றுவதுடன், பாடசாலைகளில் 1,030 தொண்டர் ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் இவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவரும் போதும், தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை.
எனவே, தொண்டர் சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதுடன், இது விடயமாக நீதிமன்றத்துக்குச் செல்வதற்கும் எமது அமைப்பு தயாராவுள்ளது' என்றார்.
5 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
30 minute ago