2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

திண்மக் கழிவுகளை அகற்றும் பணி

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக் கழிவுகளை அகற்றும் பணிகள், இன்று (12) தொடக்கம் வழமை நிலைக்குத் திரும்புமென கல்முனை மாநாகர முதல்வர் சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

சேகரிக்கப்படும் குப்பை, கூளங்களை கொட்டுவதில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அகற்றப்பட்டு வந்தன. இதனால், சில பகுதிகளில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதாக பொது மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இவ்விடயம் மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக குப்பை கொட்டும் இடமொன்றில் ஏற்பட்ட தடங்கல் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அடுத்த ஒரு வார காலத்தினுள் முற்றாக அகற்ற முடியும் என குறிப்பிட்ட முதல்வர் நிஸாம் காரியப்பர், கடந்த இரு வாரங்களாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X