2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

தேன்கூடு அறுவடை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, அட்டாளைச்சேனையின் எட்டாம் பிரிவிலுள்ள வீடொன்றில் பராமரிக்கப்பட்டுவந்த தேன்கூடு சனிக்கிழமை (05) அறுவடை செய்யப்பட்டது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இத்திட்டத்தை சிறியளவில் மேற்கொண்டிருந்தாலும், இந்த அறுவடையின்; மூலம் மூன்றரை போத்தல் தேனை பெற்றுக்கொண்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களினுடைய இணையத்தின் உபதலைவர் வி.பரமசிங்கம் தெரிவித்தார்.

தேன்கூடுகளை பராமரித்து அதன் மூலம் தேன் பெற்றுக்கொள்ளும் பயிற்சியானது, டயகோணியா நிறுவனத்தின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் புத்தலவிலுள்ள தேன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் 10 பேருக்கு வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X