2025 மே 19, திங்கட்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கற்கைநெறி

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக தொழில்நுட்பக் கற்கைநெறி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஒலுவில் மகாபொல கட்டடம் மற்றும்; மல்வத்தை விவசாயப் பண்ணையில் இக்கற்கைநெறிக்கான பீடம் இயங்கவுள்ளதுடன், 2016ஃ2017ஆம் கல்வியாண்டுக்காக 150 மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் தொழில்நுட்பத்துறையை மேம்படுத்தும் பொருட்டு 09 பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பப்பீடம் உருவாக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X