Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தங்;களது தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
கடற்றொழிலையே ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள தங்களின் எதிர்காலம் கடலரிப்பினால் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அம்மீனவர்கள் கூறினர்.
கடற்கரையோரத்தில் கொட்டப்பட்டிருந்த கற்கல் கடலரிப்பால் கடலுக்குள் சென்றுள்ள நிலையில், அக்கற்களில் தமது படகுகள் வலைகளும் அகப்பட்டு சேதமடைகின்றன. மேலும், கடலரிப்புக் காரணமாக படகுகளை நிறுத்தி வைப்பதற்கு இடம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
மேலும், இங்கு கடற்கரை வீதியாக அமைந்திருந்த கிறவல் வீதியும் அங்குள்ள பழமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி கோவிலின் வளாகத்தின் முன்பகுதியும் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அரசியல்வாதிகளிடமும் உரிய அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியபோது, கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தபோதும், இதுவரையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இக்கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் அம்மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடம் கேட்டபோது, 'அச்சுறுத்தலாகிவரும் கடலரிப்புத் தொடர்பில் உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடலரிப்பைத் தடுக்கும் வகையிலான வேலைத்திட்டத்துக்கு அதிக நிதி தேவைப்படுகின்றது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு தருவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago