2025 ஜூலை 05, சனிக்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையத்தின் புதிய கட்டடம் இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

இஸ்லாமிய பிரச்சார மையத்தின் தலைவர் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் ஜமாத் அன்ஸாரி சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தலைவர் என்.பி.எம்.அபூபக்கர் சித்தீக் மதனி பிரதம அதிதியாகவும் விஷேட அதிதியாக முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ.எல்.கலீலுர் ரஹ்மான்,சிறப்பு அதிதியாக  முஹம்மதிய்யாவின் முகாமைத்துவ உறுப்பினர் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் சலபி அகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பரகஹதெனிய ஜமாத் அன்ஸாரி சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் வழிகாட்டலில் குவைத் நாட்டின் பைத்துல் சக்காத் ஹவுஸ் நிறுவனத்தின் சுமார் 125 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தக் கட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .