Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 16 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
இன்றைய உலகில் அநேகமான உடல் நோய்கள் மன அழுத்தங்களின் மூலமே உருவாகின்றன. உடல் ஆரோக்கியத்தை பேணவேண்டுமாயின் உள ஆரோக்கியத்தையும் பேணவேண்டும் என அட்டாளைச்சேனை தள ஆயர்வேத வைத்தியசாலையின் தொற்றாநோய்ப் பிரிவின் வைத்தியப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எப். பர்வீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இன்று புதன்கிழமை (16) காலை நடைபெற்ற தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக இலங்கையின் சுகாதாரத்துறை அண்மைக்காலமாக சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. எனினும், மறுபுறம் தொற்றா நோய்களின் அதிகரிப்பினால் இலங்கை பாரிய சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கவேண்டியுள்ளது'
'அதுமாத்திரமல்லாமல், தொற்றா நோய்களால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நாடுகிளில் இலங்கையும் ஒன்றாகும். இதுவே இலங்கையில் அன்றாடம் நிகழும் மரணத்துக்குப் பிரதான காரணமாக இருக்கின்றது'
'கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை மக்களின் வாழக்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றமே தொற்றாநோய்களுக்கான காரணம் என்று ஆய்வின் அறிக்கை கூறுகின்றது. இலங்கை மக்களைப் பாதித்துள்ள பிரதான தொற்றாநோய்களாக இதயநோய், நீரிழிவு நோய், புற்றுநோய், சுவாச நோய்கள் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு என்பவை கருதப்படுகின்றன'
'இந்நோய்களை அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சைகளை தொடராக மேற்கொண்டு வந்து, மிகக் கவனமாகப் பராமரித்து வருவதன் மூலம் இந்நோய்களைக் கட்டுப்படுத்தி பெருமளவிலான மரணங்களைக் குறைக்கலாம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .