2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதியை உழுத இருவர் கைது

Thipaan   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொட்டையாறு மலைப்பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட வயல் பகுதியை,  வேளாண்மைக்காக உழுது பண்படுத்திய இருவரை நேற்று வெள்ளிக்கிழமை மாலை  கைது செய்துள்ளதுடன் ஒரு உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினர் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, மாலை 5.00  மணியளவில் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார், வயல் நிலத்தை உழுது பண்படுத்திக் கொண்டிருந்த உழவு இயந்திர சாரதியையும் அந்த வயலின் உரிமையாளர் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றினர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X