Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை, தெஹ்யத்தகண்டிப் பிரதேசத்தில் 800 க்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசேதனப் பசளை (ஜுரியாப் பசளை) மற்றும் கிருமிநாசினிகளின் பாவனையே இதற்குப் பிரதான காரணமென ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
தேசிய சூழல் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு, தீவுக்காலை பிரதேசத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'அதிக விளைச்சலைப் பெற வேண்டுமென்பதற்காக விவசாயிகள் அபாயகரமான கிருமிநாசினிகளைப் பாவிக்கின்றனர். கிருமிநாசினிகளை தெளித்து அடுத்த தினமே காய்களை சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவற்றையே மக்களும் இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர். இறுதியில் பணத்தைக் கொடுத்து நோயையும் மரணத்தையும் மக்கள் தேடுகின்றனர்' என்றார்.
19 minute ago
19 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
19 minute ago
32 minute ago
43 minute ago