Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மே 29 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு கண்டுபிடிப்புக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக, கொரோனா தொற்றுக்கு இலக்காகும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியர் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர், நோய்த் தொற்று அச்சமற்ற நிலையில் மருத்துவ சிகிச்சை வழங்கும் பொருட்டு, நகரக் கூடிய மருத்துவ சிகிச்சைக் கூடமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகரக் கூடிய மருத்துவ சிகிச்சைக் கூடம், இன்று (29) பாவனைக்கு விடப்பட்டதாக, வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.
இதன்மூலம் சிகிச்சை வழங்கும் சுகாதரத் துறையினருக்கு எந்த வகையிலும் நோய்த் தொற்றுக்கான கிருமிகள் பரவக் கூடிய சாத்தியங்கள் இல்லாத வகையில், முற்று முழுதாக காற்றுப் புக முடியாத அளவில், விரைவில் தொற்று நீக்கப்பட்டு, சுத்தம் செய்யக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடமாடும் மருத்துவ சிகிச்சைக் கூடம் போன்ற கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், விசேட நிதியமொன்றும் ஆரம்பிக்கப்பட்டு, நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago