2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நகைக்கடையில் கொள்ளை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, பொத்துவில் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றின் கதவு உடைக்கப்பட்டு சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெள்ளி மோதிரங்கள்; செவ்வாய்க்கிழமை (16) இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடையின் உரிமையாளர் வழமையாக சம்பவதினமான செவ்வாய்க்கிழமை இரவு (16) கடையினை மூடிவிட்டு சென்றுள்ளார்.  பின்னர்  புதன்கிழமை (17) காலை கடையினை திறந்தபோது கடையில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டமை தெரியவந்தது.  இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X