2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

குரங்குகளுக்கு பாலியல் நோய்

Editorial   / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை புனித தலத்தைச் சுற்றி வாழும் குரங்குகள் மற்றும் பபூன்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோயான `சிபிலிஸ்’ பரவும் வீதம் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

பொலன்னறுவை மாவட்டத்தில் குரங்குகள் மற்றும் பபூன்கள் மத்தியில் இந்த நோய் பரவி வருவதாக கிழக்கு சுகாதார மேலாண்மை பிரிவின் கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார். 

குரங்குகள் மற்றும் பபூன்களிடையே இந்த நோய் பரவியதா என்பது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகள் ஊடாக  வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் இது   உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புனித தலத்தைச் சுற்றித் திரியும் குரங்குகள் மற்றும் பபூன்கள் கூட்டங்களிடையே இந்த நோய் பரவுவது அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் சிபிலிஸால் பாதிக்கப்பட்ட பல குரங்குகள் மற்றும் எலிகள் 2023-2024 ஆம் ஆண்டுகளிலும்  நடத்தப்பட்ட சோதனைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X