2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நஞ்சற்ற உணவகம் திறந்து வைப்பு

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

நஞ்சற்ற பாரம்பரிய உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தில், இலைகஞ்சி விற்பனை நிலையம் அங்குரார்பணம்  செய்துவைக்கப்பட்டது.

பிரதேச செயலக வளாகத்தில்,  பிரதேச செயலாளர் ரீ.ஜெ. அதிசயராஜ் தலைமையில் இன்று (08) காலை இந்தப் பாரம்பரிய உணவகம் திறந்துவைக்கப்பட்டது.

தொழில் முயலுநர்களை ஊக்குவிக்கும் பாரம்பரிய நஞ்சற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடனும், கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வைக்கும் திட்டமாகவும் இவ் இலைகஞ்சி விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .