2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நடமாடும் சேவை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ. தாஜகான்

பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொத்துவில் பிரிவு 6,7,8,20,21, பிரிவுகளுக்கான நடமாடும் சேவை இன்று (24) பொத்துவில் அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நடமாடும் சேவையில் பொத்துவில் பொலிஸ் நிலையம், பொத்துவில் பிரதேச செயலகம், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொத்துவில் ஆதாரவைத்தியசாலை என்பன சேவைகளை மக்களுக்கு வழங்கின.

காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மாற்றீடு, அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியனவும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்நடமாடும் சேவையில் தென்னை அபிவிருத்தி சபையினால் 200 தென்னங்கன்றுகளும் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .