2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நலன்புரி கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பியுங்கள்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அரசங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்ற நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்குத் தகுதியானவர்களை தெரிவுசெய்வதற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக நலன்புரி சபையினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார்.

சமுர்த்தி, முதியோர், ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான உதவித் தொகை பெறுவோர் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளை எதிர்பார்ப்பவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகிய தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள எந்தவோர் உத்தியோகத்தர் ஊடாகவும் பிரதேச செயலகங்களுக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டத்துக்கமைவாக எதிர்காலத்தில் நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது அரச கொடுப்பனவுகளைப் பெறும் அனைவரும் இவ் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

சகல விண்ணப்பங்களும் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X