Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில், முஸ்லிம்களின் உணர்வைப்புரிந்து, அநீதி ஏற்படாத வகையில் நல்லதொரு தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று (29) அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சி மீது இந்நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்கள் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. குறிப்பாக, முஸ்லிம் சமூகத்துக்கெதிராக ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போதும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைப்போராட்டத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சி பங்காற்றும் என நம்புகின்றேன்.
“நாட்டிலே முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்ட போது, தகனம் செய்ய வேண்டாம். அடக்கம் செய்வதற்கு அனுமதி தாருங்கள் என முஸ்லிம் சமூகம் அரசாங்கத்திடம் மண்டியிட்டது. இந்த விடயத்தில் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் கூட இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இவற்றையெல்லாம் புறந்தள்ளி தொடர்ந்தும் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
“முஸ்லிம்களுடைய ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதனைக் கண்டித்தும், அடக்கம் செய்யக்கோரியும் கடந்த சில நாட்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“எனவே, அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, முஸ்லிம்களுடைய மத நம்பிக்கை மற்றும் உணர்வுகளைக் கருத்திற்கொண்டு, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
41 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
57 minute ago