2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நல்லிணக்கப் பயணம் அம்பாறையை வந்தடைந்தது

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகளின் 06 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, சக்கர நாற்காலியில் இலங்கையை சுற்றிவரும் மாற்றுத்திறனாளிகள், அம்பாறையை வந்தடைந்தனர்.

இதன்படி, திருக்கோவில் பிரதேசத்தை நேற்று (11) மாலை வந்தடைந்த இவர்கள், அட்டாளைச்சேனை பிரதேசத்தை இன்று (12) வந்தடைந்தனர்.

இம்மாதம் முதலாம் திகதி, யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய இனங்களைச் சேர்ந்த மூன்று மாற்றுத் திறனாளிகளும் இப்பயணத்தை ஆரம்பிதிருந்திருந்தனர். சிங்கள சகோரதரரின் புதல்விக்கு ஏற்பட்ட சுகையீனம் காரணமாக, அவரது பயணம் இடைநிறுத்தப்பட்டு.  முஹம்மட் அலி, சுதாகர் ஆகிய இருவரது பயணம் தொடரப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் இருவரும் தமது பயணத்தை சக்கர நாற்காலியூடாக யாழ்ப்பாணத்லிருந்து கொழும்பு சென்று, அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை, ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

இதன் பின்ன​ர் காலி, மாத்தறை, இரத்தினபுரி, அம்மாந்தோட்டை, மொனராகல ஊடாக பொத்துவில், திருக்கோவிலில் இருந்து அட்டாளைச்சேனையை வந்தடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .