Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளர் கலாநிதி ஏ.எம். நிஹால் தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜப க்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு பிற மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்துவது பொறுத்தமற்றது. கடந்த காலங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வருகை தந்து அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள், இம்மாவட்டத்திலிருந்து வாக்களித்த மக்களுக்கு எதுவுமே செய்யாது சென்றுள்ளனர்.
“இம் மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் வெற்றிபெற்றாலும் சரி, வெற்றிபெறாவிட்டாலும் சரி வாக்களித்த மக்களுக்கு, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களையும் நன்மைகளையும், பெற்றுக் கொள்ள முடியும்.
“எனவே, அம்பாறை மாவட்டத்திலுள்ள வேட்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும்” என, அம் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
54 minute ago