Editorial / 2020 மே 28 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்
சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக, 'கணணி உதிவியாளர்கள்' சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமையால், சேவையில் அமர்தப்பட்ட குறித்த கணணி உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தமிழ்பேசும் கணணி உதவியாளர்கள் சங்கத்தினர், இன்று (28) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.
சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நாடளாவிய ரீதியிலுள்ள சமூர்த்தி வங்கிகளுக்கு கணணி உதிவியாளர்கள் 1,600 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மூன்று மாதகால பயிற்சியின் பின்னர் நிரந்தர சேவையில் உள்வாங்கப் படுவீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு, மூன்று மாதத்துக்குரிய பயிற்சிக்கால கொடுப்பனவும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது 05 மாதங்கள் கடந்தும் தமது சேவை நிரந்தரமாக்கப்படாமல் பயிற்சிக்கால கொடுப்பனவும் இல்லாமல் தொடர்ந்தும் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றோமென, பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட கணணி உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சந்திப்பில், அம்பாறை மாவட்ட தமிழ்பேசும் கணணி உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.எம்.ஹசீப், செயலாளர் எஸ்.ஏ.முஹம்மட் ஆபித் ஆகியோர் கலந்துகொண்டு, மேற்படித் தகவல்களைத் தெரிவித்தனர்.
எனவே, பாதிக்கப்பட்டுள்ள தமக்கு, அரசாங்கம் விரைவில் தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென, இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
4 minute ago
14 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
16 minute ago