2025 மே 05, திங்கட்கிழமை

‘நீரிழிவு நோய்க்கு எதிராகப் போராடுவோம்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயது குறைந்தவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படத்தொடங்கியுள்ளதாகவும் சமூகத்திலுள்ள அனைவரும் இந்நோய்க்கு எதிராகப் போராடுவன் மூலமே, இதனைக் கட்டுப்படுத்த முடியுமென, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் தெரிவித்தார்.

 உலக நீரிழிவு தினத்தையொட்டி, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்பணர்வு ஊர்வலமும், இலவச வைதிய முகாமும், இன்று (14) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீரிழிவு நோய் வருவதற்கு முன்னர்  பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் நோய் ஏற்பட்ட பின்னர் மருத்துவ நடவடிக்கைகளையும், ஆலோசனைகளையும் கிரமமாகப் பின்பற்றுதல் அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X