எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில் களியோடை அணைக்கட்டுப் பகுதி மற்றும் அதனை அண்டிய நீரேந்து பிரதேசங்களில், பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை செய்யப்பட்ட வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர் ரீ. மயூரன், இன்று (29) தெரிவித்தார்.
இது தொடர்பில், மேலும் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,
ஒலுவில் களியோடை அணைக்கட்டு நீரேந்து பகுதியில், தற்காலத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதன் காரணமாகவே, அப்பகுதியில் பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் வகையில், நீர்ப்பாசனத் திணைக்களத்தால் எச்சரிக்கை அறிவித்தல் பலகைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தூரப் பிரதேசங்களில் இருந்து அணைக்கட்டுப் பிரதேசத்தைப் பார்வையிடுவதற்காக, தினசரி பெருந்தொகையானோர் வருகை தருகின்றனர். இவர்களின் பாதுகாப்புக் கருதியே, முன்னெச்சரிக்கை அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதனை எவரும் அலட்சியம் செய்து, அணைக்கட்டுப் பிரதேசத்தில் நீராட வேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
களியோடை ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும், கடந்த காலங்களில் பலர் முதலைகளின் தாக்குதலுக்குள்ளானதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago