Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, கல்முனை, இறைவெளிக்கண்டத்தை அண்டிய நீரோடையில் உள்ள ஆற்றுவாழைகளை, நீர்ப்பாசனத் திணைக்களம் அகற்றி வருகின்றது.
குறித்த நீரோடையில் அதிகளவான ஆற்றுவாழைகள் காணப்பட்டதால் கடந்த இரு நாள்களாக வெள்ள நீரோட்டம் தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெக்கோ இயந்திரத்தின் மூலம் குறித்த ஆற்றுவாழைகள், இன்று (18) முதல் துரிதமாக அகற்றப்பட்டு வருகின்றன.
மேலும், இப்பிரதேசத்தில் உள்ள சிறு குளங்களில் படர்ந்துள்ள ஆற்றுவாழைகளை அகற்றுவதற்கு, நீர்ப்பாசனத் திணைக்களமும் கல்முனை மாநகர சபையும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதேவேளை,மாவடிப்பள்ளி, நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் பெருக்கெடுத்து, இப்பகுதியின் ஊடாக ஓடும் போது, குறித்த ஆற்றுவாழைகளால் அது தடைப்பட்டு, அருகில் உள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026