Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பொது நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் கிடைப்பதற்கரிய பெறுமதி வாய்ந்த நூல்களை, ஆசியா பவுண்டேஷன் தொடர்ச்சியாக வழங்கி வருவதன் மூலம், இப்பகுதி மாணவர்களுக்கு அந்நிறுவனம் உன்னதப் பணியாற்றி வருகின்றதாக, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை உள்ளூராட்சி மன்றங்களுக்குட்பட்ட பொது நூலகங்களுக்கும் சில பாடசாலைகளுக்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆசியா பவுண்டேஷன் நிறுவனத்தால் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு, மருதமுனை சமூக வள நிலையத்தில், இன்று (09) நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆசியா பவுண்டேஷன் புத்தகங்கள் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி.நல்லதம்பி, நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேயர் மேலும் தெரிவிக்கையில்,
"வாசிப்பு என்பது ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகின்றது. அந்த அடிப்படையில், ஆசியா பவுண்டேஷன் அனைவரையும் ஊக்குவித்து வருவதுடன், எமது நாட்டின் கல்வித்துறை முன்னேற்றத்துக்காக பாரிய பங்களிப்புச் செய்து வருகின்றது” என்றார்.
“அதேவேளை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களில் நிலவிவருகின்ற குறைபாடுகளையும் தேவைகளையும் கண்டறிந்துள்ளோம். அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எதிர்காலங்களில் விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து வாழ்கின்ற பெரிய நீலாவணை, இஸ்லாமாபாத் பிரதேசங்களில் புதிதாக நூலகங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” எனவும் மேயர் தெரிவித்தார்.
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago