2025 மே 14, புதன்கிழமை

நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரும்புச் செய்கையில் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருவதால், நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி, அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள், இன்று (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீகவாபி கண்டத்தைச் சேர்ந்த மூவின மக்களும் ஒன்றிணைந்து, தீகவாபி பாடசாலை சந்தியில் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால், அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, பொலிஸாருக்கும், விவசாயிகளுக்குமிடையில் முறுகல்நிலை ஏற்பட்டு சிறிதுநேரம் அங்கு பதட்டநிலை தோன்றியமை குறிப்பிடத்தக்கது.

தமது வாழ்வதாராத்துக்காகப் போராடும் ஏழை விவசாயிகள் தொடர்பில், பொலிஸாருக்குப் பொய்யான தகவல்களை வழங்கி, தமது போராட்டத்தைத் திசை திருப்ப முனைவது கண்டிக்கத்தக்கதென, ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இதன்போது கோசமிட்டுனர்.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர், பொலிஸார், கரும்புக் கம்பனியின் தடைகளை மீறி, விவசாயிகள் தங்களது காணிக்குச் சென்று நெற்செய்கைக்கான துப்புரவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .