2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நூல் கொள்வனவுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட 265  பாடசாலைகளின் நூலகங்களுக்கும் நூல் கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

'அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை' என்ற திட்டத்தின் கீழுள்ள பாடசாலைகளுக்கே மேற்படி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 84 பாடசாலைகளும் திருகோணமாலையில் 80 பாடசாலைகளும் அம்பாறையில் 101 பாடசாலைகளும் இதற்காக தெரிவுசெய்யப்பட்டன.  

ஒரு பாடசாலைக்கு கூடிய தொகையாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம்; ரூபாய் படியும் குறைந்த தொகையாக 30 ஆயிரம் ரூபாய் படியும் நிதி உதவி கடந்த வாரம் மேற்படி பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X