2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

படகில் செல்ல முயன்ற 38 பேர் கைது

Freelancer   / 2022 ஜூன் 12 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கனகராசா சரவணன்

நீர்கொழும்பில் இருந்து இயந்திர படகு ஒன்றில் ஊடாக, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 8 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை   அதிகாலையில் கைது செய்து,   அம்பாறை பானம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில்  கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவுஸ்திரேலியா  நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை  சுற்றிவளைத்து இடைமறித்து சோதனையிட்டனர்.

அதில் சட்டவிரோதமாக 38 பேர் இருப்பதை கண்டுபிடித்து அவர்களை கைது ​செய்து கரைக்கு கொண்டுவந்து  பான​ம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதில், 2வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் உள்ளனர்.

மனித கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் என இனங்காணப்பட்ட அறுவர், ஆண்கள் 26 பேர், பெண்கள் ஐவர் மற்றும் சிறுவர்கள் 7 பேரும் அடங்குகின்றனர்.

இதனையடுத்து படகை, கடலில் இருந்து  வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்கள்  நீர்கொழும்பு, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்வர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .