2025 மே 14, புதன்கிழமை

’பட்டதாரிகள் நியமனம் இரத்துச் செய்யப்படவில்லை’

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

புதிய பட்டதாரி நியமனங்கள் என்பது இரத்து செய்யப்படவில்லை என்பதை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் தொடர்பில், அம்பாறை -   கல்முனையில் தனது  கட்சி ஆதரவாளர்களுடன் நேற்று (22)  சந்திப்பில் ஈடுபட்ட பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு என்பது வழங்கப்பட்டுள்ள ஒரு விடயம். ஆகவே, நீங்கள் அச்சப்பட வேண்டாம். இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த  பின்னர் அனைவரும் மீண்டும் வேலைக்கு அழைக்கப்படுவார்கள்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X