2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பட்டமளிப்பு விழா

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அக்கரைப்பற்று அல்-முகர்ரமா ஹிப்ழுல் குர்ஆன் ஆண்கள் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை  மாலை 6.30 மணிக்கு அக்கரைப்பற்று தேசிய நீர் விநியோக சபையின் முன்வளாகத்தில் நடைபெற்றது.

தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.எம்.அப்துல் றாசீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,அல்குர்ஆனை மனனம் செய்த 13 ஹாபிழ்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  

இந்நிகழ்வில்,காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லுாரியின் செயலாளர் மௌலவி எம்.எச்.எம்.புஹாரி, காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லுாரியின் விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜீ.எம்.அமீன், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக்கல்லுாரியின் அதிபர் மௌலவி எம்.எம்.ஏ.லத்தீப், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஏ.சுபைடீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X