Janu / 2024 ஜூலை 11 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் புதன்கிழமை (10) அன்று கடமையேற்றுக்கொண்டார்.
அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் குழாம் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளர் சட்டத்தரணி பிர்னாஸ் இஸ்மாயில் கௌரவிக்கப்பட்டதுடன் உதவிப் பிரதேச செயலாளர் எம். ராமக்குட்டி, கணக்காளர் எஸ்.எம். ஹாறுன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். சப்ரி நிருவாக உத்தியோகத்தர் நிருவாக உத்தியோகத்தர் கிராம நிலதாரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்

7 minute ago
19 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
26 minute ago