அஸ்லம் எஸ்.மௌலானா / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி எழுதிய 'பனூ உமையா' ஆட்சிக் காலம் தொடர்பிலான வரலாற்று நூலின் வெளியீட்டு விழா, எதிர்வரும் 09ஆம் திகதி பிற்பகல் 04 மணியளவில் கொழும்பு-10, டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
அத்துடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் கௌரவ அதிதியாகவும் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சி.அகார் முஹம்மத் சிறப்புப் பேச்சாளராகவும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago