Princiya Dixci / 2021 ஜூலை 26 , பி.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்று (26) பிற்பகல் வேளை பலத்த காற்றுடனான மழை பெய்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
அத்துடன், பலத்த காற்று வீசியதால் அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்துக்கு அண்மையில் அமையப் பெற்ற தொலைத் தொடர்பு கோபுரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால், சில வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் உடமைகள் சிலவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வீடுகளில் இருந்த சிறுவர்கள், வயோதிபர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
மேலும், இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் போன்றவற்றுக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் சில மணி நேரம் மின்துண்டிப்பும் இடம்பெற்றிருந்தது.
மேற்படி தொலைத் தொடர்புக் கோபுரம், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி மக்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமையப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
32 minute ago
37 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago
51 minute ago
1 hours ago