Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்துள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு, பழுதடைந்த பொருள்கள் விநியோகிக்கப்பட்டதாக, குற்றஞ்சாட்டப்படுகிறது.
அம்பாறை, பெரிய நீலாவணை பகுதியிலுள்ள இருவேறு தொடர்மாடிக் குடியிருப்பைச் சேர்ந்த வறிய மக்களுக்கே, இப்பொருள்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
இப் பொதிகள், அப்பகுதிமக்களுக்கு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் இப்பொதியின் விநியோக சேவைக்கு 20 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட குறித்த பொதியில், கோதுமை மா, நெத்தலி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருள்கள் காணப்பட்டுள்ளதுடன், பெரிய வெங்காயம், நெத்தலி, உருளைக்கிழங்கு என்பன பழுதடைந்து காணப்பட்டன என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இப்பொருள்கள், சாய்ந்தமருது பகுதியில் பொதிசெய்யப்பட்டுள்ளதுடன்,
பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் உள்ள 100க்கும் அதிகமான மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில், பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
8 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago