2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பஸ் மிதிபலகையில் பயணித்தவர் விழுந்து உயிரிழப்பு; சாரதிக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

பஸ்ஸின் மிதி பலகையிலிருந்து ஒருவர் தவறி விழுந்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட குறித்த பஸ் சாரதியை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி, புதன்கிழமை (10) உத்தரவிட்டார்.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான மேற்படி பஸ் புதன்கிழமை அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்திலிருந்து வாழைச்சேனை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டிருந்தபோது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக காத்தான்குடி பீ.சி. வீதியைச் சேர்ந்த இஸ்மாலெவ்வை முஹம்மத் பாறூக் (59 வயது) என்பவர் ஏறியுள்ளார்.

பஸ் சிறிது தூரம் செல்வதற்கிடையில் மிதி பலகையிலிருந்து தவறிக் கீழே விழுந்த இவர் பலத்த காயத்துடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அன்றையதினம் மாலை அவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X