2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாகிஸ்தான் செல்கிறார் நெடுஞ்செழியன்

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

நிறைவேற்று தரத்திலுள்ள அதிகாரிகளுக்கான இரண்டு வார காலப் பயிற்சியில் பங்கு பெறுவதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளருமான ஆர்.நெடுஞ்செழியன், இந்தவார இறுதியில் பாகிஸ்தான் பயணமாகிறார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக, பாகிஸ்தான் லாகூரிலுள்ள பொதுக் கொள்கைகள் தேசியக் கல்லூரியில், இம்மாதம் 15ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை, இந்தக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

இப்பயிற்சியில், இலங்கை அரசாங்கத்தின் நிறைவேற்று தரத்திலுள்ள அமைச்சுகளின் செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதம கணக்காளர்கள் உள்ளிட்ட 17பேர் கலந்து கொள்கின்றனர்.

கிழக்கிலிருந்து, கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், வடக்கு மாகாணத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கிருபா சுதன் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

இப் பயிற்சிக் கருத்தரங்கு விரிவுரைகள், உள்ளக வெளியகக் களப் பயிற்சிகள், களப்பயணங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .