2025 மே 14, புதன்கிழமை

பாடசாலைகளின் காணிகளில் இருந்து ‘இராணுவத்தை வெளியேற்றுக’

எஸ்.கார்த்திகேசு   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பாடசாலைகளின் காணிகளில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு, திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெறும் இல்மனைட் அகழ்வையும் தடுக்க வேண்டுமென்றும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் தலைமையில் நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் நேற்று (03) மாலை இடம்பெற்ற ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தின் போதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வட, கிழக்கு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அதனடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட திருக்கோவில் 03 கிராமத்தில் அமைந்தள்ள விஸ்வதுளசி வித்தியாலயம், அக்கரைப்பற்று -செஞ்ஜோன் வித்தியாலயம், ஆலையடிவேம்பு - கனகர் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளின் காணிகளை, இராணுவம் தங்களின் தேவைகளுக்காக் கையகப்படுத்தி இருப்பதாக, கோடீஸ்வரன் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

எனவே, அவ்விடங்களிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி, அந்தக் காணிகளை, மாணவர்களின் கற்றல் செயற்றிட்டங்களுக்கு வழங்க இடமளிக்குமாறு, அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, திருக்கோவில் பிரதேசத்தில் அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்படவுள்ள இல்மனைட அகழ்வுக்கான பணிகளை உடனடியாக நிறுத்தி, அப்பிரதேசத்தில் தற்போது எற்பட்டுள்ள கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கடலோர சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பாக வினவியபோது, அவர்கள் இது தொடர்பாக தமக்கு ஒன்றும் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்நது, ஜனாதிபதி அதிகாரிகளிடம் இதனை உடனடியாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததுடன், எதிர்வரும் 08ஆம் திகதி, கவீந்திரன் கோடீஸ்வர் எம்.பியின் கோரிக்கைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க எதிர்பார்க்கின்றேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .