2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாடசாலை நேரத்தில் வலயக் கல்வி அலுவலகம் வரத்தடை

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

எதிர்வரும் வருடத்திலிருந்து பாடசாலை நேரத்தில், அதிபர்கள், ஆசிரியர்கள் வலயக் கல்வி அலுவலகத்துக்கு வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான பாடசாலைகள் தொகை மதிப்புச் செயலமர்வுக் கூட்டத்தில், இத்தகவலை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம்  தெரிவித்தார்.

அதிபர்கள், ஆசிரியர்கள் தகுந்த காரணமின்றி ,பாடசாலைக்கு வெளியே செல்லுதல் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டுமென, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை நேரத்தில், அதிபர், ஆசிரியர்கள் வலயக் கல்வி அலுவலகத்துக்கு வருவதை தடை செய்வதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

அவ்வாறு வருகை தருவதாயின் பாடசாலை முடிவுற்ற பின்னர் வருகை தரலாம் எனக் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .