2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாடசாலை பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில், இலங்கை போக்குவரத்துச் சபையின் பாடசாலை பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு, பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில், காலை வேளையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் செல்வதாக, மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று, நிந்தவூர், கல்முனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைக்கு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் தினந்தோறும் செல்கின்றார்கள்.

மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபை சாலைகளால் மாதாந்தப் பருவகாலச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பஸ் தரிப்பிடங்களில் நிற்கும் மாணவர்களைக் கண்டால் பஸ்களை நிறுத்தாமல் செல்வதால் மாணவர்கள் பல அசௌகரீகங்களை எதிர்கொள்வதோடு, நேரம் தாமதித்து பாடசாலை செல்வதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து பாடசாலை பஸ் சேவையை ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .