Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 ஜூன் 02 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், ஏ.எல்.எம்.ஷினாஸ், சகா
கல்முனை வடக்கு உப பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவில் தொடர்பான வழக்கை, கல்முனை நீதவான் நீதிமன்று, இன்று (02) தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை, விசேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் விசாரித்து, மனுவிலுள்ள குறைபாடு காரணமாக வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக கோவில் சார்பாக பிரதேச செயலாளர் ரி.ஜேஅதிசயராஜ் மன்றில் ஆஜராகியிருந்ததுடன், சட்டத்தரணிகளான ந.சிவரஞ்சித், மதிவதணன், ஆர்த்திகா ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இந்தக் கோவில், சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர சபை மேயர் சார்பில் 2018ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்திருந்தது.
பல்வேறு வழக்கு தவணைகளின் பின்னர் இந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago