2025 மே 12, திங்கட்கிழமை

புதிய வீடுகள் கையளிப்பு

எஸ்.கார்த்திகேசு   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை - பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் 06 கிராம உத்தியோகத்தர் பிரிவில், திரியபியச திட்டத்தின் ஊடாக இரண்டு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

பொத்துவில் சமுர்த்தித் தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம் தலைமையில், நேற்று (16) நடைபெற்ற இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இவ்வீடுகள், சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவால் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெரும் வீடற்ற சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீட்டுக்குத் தலா இரண்டு இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு படுக்கை அறைகள், சிறிய வரவேற்பு மண்டபம் உள்ளடங்களாக வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X