எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படாது எஞ்சியிருக்கு 2018ஆம் ஆண்டுக்கான இலவசப் பாடப் புத்தகங்களை வழங்குவதற்கு, அவசர நடவடிக்கைகளை அதிபர்கள் மேற்கொள்ள வேண்டுமென, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர், 2018ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட போதிலும், கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச பாடசாலைகளில் அப்பணி முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை என பெற்றோர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
முக்கிய பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள்கூட இன்னும் வழங்கப்படாதுள்ளதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
2018 முதலாந்தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக, நாடளாவிய ரீதியில் பாடசாலைகள், நாளை (02) மீளத் திறக்கப்படவுள்ளன.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025