Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மார்ச் 29 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டிக் கிராம மயானப்பகுதியில் புத்தர் சிலை அமைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம், நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
அங்கு வந்த பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினருக்கு பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்து அவர்கள் பின்வாங்கினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன் மக்களுடன் சமுகமளித்து, அங்குவந்த பிக்குமாரிடம் நியாயத்தை எடுத்துரைத்ததும் அவர்கள் ஏற்றுக்கொண்டு பின்வாங்கினர்.
இது தொடர்பில் உறுப்பினர் சுபோதரன் தெரிவிக்கையில், “பொத்துவில், முகுதுமகாவிகாரை பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினர் எமது மயானப்பகுதியில் புத்தர்சிலை அமைப்பதற்காக கொங்கிரீட் தூண் முதலான பொருட்களுடன் வந்திறங்கினர். இது விடயம் மக்களுக்குத் தெரியவரவே, அங்கு மக்கள் ஒன்றுகூடியமையால் நிலைமை பதட்டத்துக்குள்ளானது.
“நானும் அங்குசென்று, அவர்களிடம் இது எமது பிரதேச மயானம். இதற்குள் புத்தர் சிலை அமைப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. எனவே, முயற்சியைகை விடுங்கள் என்றேன்.
“பதிலுக்கு பிக்குமார், இது வன இலாகா கட்டைபோட்ட பகுதிதானே நாங்கள் சிலை வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று வாதம் புரிந்தார்கள். மக்களின் காணிகளை வன இலாகா கட்டைபோட்டு வைத்துள்ளது. அதைவிட இது மக்கள் வாழும்பகுதி. அவர்கள் இங்கு புத்தர் சிலை வருவதை விரும்பவில்லை. எனவே, இங்கு பிரச்சினையை எழுப்ப வேண்டாம் என்றேன்.
“அவர்கள் எனது வாதத்தை ஏற்றுக்கொண்டு, கொண்டுவந்த பொருட்களுடன் கிளம்பினர். பிரச்சினை தீர்ந்தது” என்றார்
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago