2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புலவர் மணிஷரிபுத்தின் மகா வித்தியாலயத்தில் நாளை உயர்தர மாணவர் தினம்

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

பெரியநீலாவணை புலவர் மணிஷரிபுத்தின் மகாவித்தியாலய மாணவர்களின் முதலாவது உயர்தர மாணவர் தின விழா  நாளை காலை 10.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எம்.முகம்மட் நியாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
பிரதி அதிபர் எம்.சி.அப்துல் நாஸர்,உதவி அதிபர் எம்.எம்.ஹஸ்மி ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெறவுள்ள இந்த விழாவில், பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் கலந்து கொள்கின்றார்.
மேலும் சிறப்பு அதிதிகளாக கல்முனை கல்வி வலய அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெற்றோர்களும் கலந்துகொள்கின்றனர். இங்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .