2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பெண் ஊழியர் மீது தாக்குதல்; உத்தியோகத்தர் தலைமறைவு

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

நிந்தவூரில் பெண் ஊழியர் தவப்பிரியாவைத் தாக்கிய உத்தியோகத்தரைத் தேடி சம்மாந்துறைப் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

பெண் ஊழியர் தவப்பிரியா செய்த முறைப்பாட்டின் பேரிலும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விடுத்த உத்தரவின்பேரிலும் அவரைக்கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி ஜயலத் இதற்கென விசேட பொலிஸ் குழுவினரை, நிந்தவூருக்கு அனுப்பி, அவரது வீட்டை சோதனையிட்டார். வீடு பூட்டியிருந்தது.

அதனையடுத்து அவரது உறவினரான அரசியல்வாதியொருவரின் வீட்டுக்கும் பொலிஸார் சென்றுள்ளனர். அங்கும் அவர் இருக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, அவர், கொழும்புக்குச் சென்றிருக்கலாமென நம்பப்படுகிறது.

எப்படியிருப்பினும், மிகவிரைவில் நாம் அவரைக் கைது செய்வோம் என, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயலத், இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் இஸதீனிடமும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறிலிடமும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .