வி.சுகிர்தகுமார் / 2020 மார்ச் 12 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

பல வருடங்களாக முறையான பெயர்பலகையின்றிச் செயற்பட்டுவந்த திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பெயர்ப்பலகை திரை நீக்கமும் மர நடுகை நிகழ்வும், நேற்று (11) நடைபெற்றது.
சின்னப்பனங்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிதியுதவியுடனும் அச்சங்கத்தின் தலைவரும் பாடசாலைஅபிவிருத்திக் குழு உறுப்பினருமான ஆர்.சுவர்ணராஜின் முழுமையான பங்களிப்புடன் பெயர்ப்பலகை அமைக்கப்பட்டது.
பாடசாலையின்அதிபர் க.ஜயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படைப்பிரிவின் அதிகாரி மேஜர் டபிள்யூ.எம்.ஏ.பி.வாசல பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பெயர்பலகையை திரைநீக்கம் செய்தார்.
தொடர்ந்து ஞாபகார்த்தமாக பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago